கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்து இருக்கிறேன்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருக்கிறேன். இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.
தேமுதிக திமுக கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்தை மதித்து ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் இன்று தாராபுரத்தில் மேற்கொள்கிறேன். தாராபுரத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்
யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றி தவறாக பேசுவதை எந்த காலத்திலும் அனுமதிக்க முடியாது. யாருக்கும் அந்த உரிமை இல்லை. பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
தேமுதிக எந்த கூட்டணியில் இருக்கின்றதோ அந்த கூட்டணி வேட்பாளருக்கு பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறேன். கடைசியில் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.
எங்களைப் பொருத்தவரை எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்றுதான் நாங்கள் சொல்வேன். மற்றவர்கள் அவர்கள் கூட்டணி ஜெயிக்கும் என சொல்வார்கள். இது இடைத்தேர்தல். மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு
கேப்டனின் ஆன்மா குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்த கேள்விக்கு,
முதலில் ஆதவ் அர்ஜுன் கேப்டனை நேரில் பார்த்திருக்கிறாரா?
முதலில் அவர் கேப்டனை பார்த்து இருக்கின்றாரா? சினிமாவில் ஸ்கிரீனில் பார்த்து இருப்பார்.
கேப்டனின் ஆன்மா என்னை சுற்றி இருக்கும், எங்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தான்.
கேப்டன் குடும்பத்திற்கும் கேப்டன் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் கேப்டன் ஆன்மா பேசுவதற்கு அருகதையே கிடையாது அவர்கள் கேப்டனை பக்கத்தில் கூட பார்த்தது கிடையாது.
தம்பி ஆதவ் அர்ஜுனா இதோடு அவரைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இ.வி.எம் இயந்திரத்தில் பல குளறுபடிகள் நடப்பதாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் மூலம் ஆட்சி மாறி இருக்கிறது.
பழைய முறைப்படி தேர்தல் வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
இ.வி.எம் பாக்ஸில் நிறைய தவறுகள் நடைபெறுகிறது. இது குறித்து இன்று எனது பிரச்சாரத்தில் பேசுகின்றேன். நாளை கிராம சபை கூட்டம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறுகிறது.
தேமுதிக சார்பில் கிராமசபை கூட்டங்களில் எங்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இவிஎம் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்கள். பழைய தேர்வு முறை தான் கொண்டுவரப்பட வேண்டும் என தேமுதிக வலியுறுத்துகின்றது
பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நான்கு முதல் ஐந்து மடங்கு உயர்ந்து இருப்பதால் மக்கள் பாதிக்கின்றனர்.
விலைவாசி உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை திரும்ப பெற வேண்டும்.
மின்கட்டண பிரச்சனை, டாஸ்மாக் பிரச்சனை, பாலியல் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை விஜய் இன்னும் நிறைவேற்ற வில்லை.
2500 ரூபாய் பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
பாமக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாடு எடுத்திருப்பது மதுராந்தகத்தில் தவெகவிற்கு சாதகமாக இருக்குமா என்ற கேள்விக்கு? இந்த கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டும் என பதில் அளித்தார்.
