Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டை அருகே …. சிவசக்தி ஞானபீடத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆடி 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு  இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாலத்தளி அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில் ஆடி மாத மூன்றாவது (2.8.24)வெள்ளிக்கிழமை சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பேராவூரணி ,பட்டுக்கோட்டை ,முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்துஆயிரக்கணக் கார்காவயலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.   குடும்பம் குடும்பமாக பக்தர்கள் வந்திருந்து   வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!