Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆவினுக்கு எதிராக போட்டியிடவில்லை.. அமுல் நிறுவனம்….

தமிழகத்தில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. அமுலுக்கு பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடமிருந்து என் ஓ சி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன.

கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்துள்ளோம். விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் குறைந்தே விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளின் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும், ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!