மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 1000 வீரர்கள் வந்து உள்ளனர். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபி சித்தர்(பனியன் எண்52) என்ற இளைஞர் 23 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். மீண்டும் அவர் 24வது காளையை அடக்க களம் கண்டபோது மைதானத்திற்குள் வந்த போலீஸ் வாகனத்தில் அபிசித்தர் மோதிவிட்டார், இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் நிலை குலையவில்லை. அதன்பிறகு அவர் ஓய்வுக்கு சென்று விட்டார். 7 சுற்று முடிந்த நிலையிலும் அவரே முன்னிலையில் இருந்தார். தான் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.