Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்கம்பி அறுந்து விழுந்ததில் விபத்து… கோவையில் பரபரப்பு….

கோவை- பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு உள்ள 7வது தெருவில் நேற்று காலை சுமார் 8.45 மணியளவில் மின்கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டி ஒருவர் மீது மின் கம்பிகள் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின்கம்பங்கள் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த விபத்தின் சிசிடிவி கட்சிகள் வெளியாகி உள்ளது.

காற்று, மழை காலங்களில் இது போன்று மின்கம்பங்கள் சாய்வது பல்வேறு இடங்களில் நிகழக்கூடும் என்பதால் மின்வாரிய அதிகாரிகளும் அலுவலர்களும் மின்கம்பங்களின் உறுதி தன்மையை சரிபார்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!