Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“விபத்தில்லா கரூர்” – காவல்துறையின் விழிப்புணர்வு முயற்சி!

“விபத்தில்லா கரூர்” – காவல்துறையின் விழிப்புணர்வு முயற்சி!

விபத்தில்லா கரூர்… சாலை பாதுகாப்பை வலியுறுத்தி காவல்துறை விழிப்புணர்வு பேரணி பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், காவல்துறை சார்பில் பல்வேறு

நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கு காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஒருங்கிணைந்து சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

மேலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு பணிகளும்

தீவிரப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக வேகக் கண்காணிப்பு கருவிகள், பாடி வோர்ன் கேமராக்கள், ஸ்மார்ட் காவலர் செயலி மற்றும் முக அடையாள செயலி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், பழைய பேருந்து நிலைய

ரவுண்டானா பகுதியில் ‘விபத்தில்லா கரூர்’ என்ற பெயரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஹெல்மெட் அணிவதன் அவசியம், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குவது மற்றும் போக்குவரத்து

விதிகளை முறையாகப் பின்பற்றுவது குறித்து பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

‘விபத்தில்லா கரூர்… பாதுகாப்பான பயணம்…’ என்ற இலக்குடன், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி காவல்துறையின் இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!