அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இப்படம் வருகிற 6-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் அஜித்திடம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடலை அசத்தலாக பாடிய ரசிகரிடம் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர் அழகாக பாடுவதை புன்னகையுடன் வியந்து கேட்டு ரசித்த அஜித் அவரை பாராட்டினார். பின்னர் ரசிகரின் பெயரை கேட்க அவர் அஜித் என கூற, இருவரும் சிரித்தவாறு கட்டியணைத்தனர்.