Skip to content

நடிகர் அஜீத் என்னுடைய இன்ஸ்பிரஷேன்….கோவையில் நடிகர் மணிகண்டன் பேட்டி…

  • by Authour

குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நக்கலைட்ஸ் யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமான ராஜேஸ்வர் காளி சாமி இயக்கியுள்ள ‘குடும்பஸ்தன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சன்வி மேகனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வைஷாக் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் குடும்பஸ்தன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.இதில்

கலந்து மணிகண்டன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்..

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன்,தற்போதைய கால கட்டத்தில் நடுத்தர குடும்பஸ்தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

குடும்பஸ்தன் திரைப்படத்தில் அதிகமான நடிகர்கள் நடித்துள்ளதாக கூறிய அவர், குறிப்பாக குடும்பத்தில் துக்கம் இன்பம் அனைத்தும் இருக்கும் சோகமான பூச்சு இல்லாமல் சந்தோஷமாக காமெடியாக இருக்கும் படம் தான் குடும்பஸ்தன் என அவர் கூறினார்..

அஜித் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று கூறிய அவர், சிறிய படங்களுக்கு ஆதரவு இருக்கிறது பெரிய படங்களுக்கு இல்லை என சொல்லி விட முடியாது என்று கூறினார்..

நடிகை சான்வி கூறும்போது..

இந்த படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது குடும்பஸ்தன் திரைப்படம் அனைத்து வீடுகளிலும் நடக்கின்ற விஷயத்தை இந்த படத்தில் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்…

error: Content is protected !!