Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே பாத்திர கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு

ஆடுதுறை ரயில் நிலைய சாலையில் பாத்திரக்கடை வைத்திருக்கும் கோடீஸ்வரன், அவரது மகன்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரை பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்த கும்பல் கோடீஸ்வரன் வைத்திருந்த 68,700 பறித்து சென்றது.
இச்சம்பவம் தொடர்பாக ஆடுதுறை தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் எடிசன் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நபர்கள் மீது திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் .

திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் ரயில்வே நிலைய சாலையில் கோடீஸ்வரன் என்பவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார் நேற்று இரவு பாத்திர கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன் இவரது மகன்கள் பாலசுப்பிரமணியன் பிரபாகரன் ஆகியோர் வீட்டிற்கு வரும்போது சந்திரன் என்ற நபரின் தலைமையில் காத்திருந்த கும்பல் கண்மூடித்தனமாக இந்த மூவரையும் தாக்கியதாகு

கூறப்படுகிறது ( இந்த மூவரை தாக்கும் சிசிடிவி காட்சி பதிவு உள்ளது) மேலும் கோடீஸ்வரன் பையில் வைத்திருந்த 68 ஆயிரத்து 700 ரூபாயையும் இந்த கும்பல் பறித்து சென்றுள்ளது . மேலும் இந்த கும்பலில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஆடுதுறை பகுதி கிளைச் செயலாளர் எடிசன் இருந்தார் எனவும் கூறப்படுகிறது இவர் மீதும் திருவிடைமரு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்த கோடீஸ்வரன் இவரது மகன்கள் பிரபாகரன் பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்தக் கும்பல் அடிக்கடி கடையில் மாமூல் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடைசியாக பணம் கேட்டபோது தராத காரணத்தினால் நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக பாலசுப்ரமணியன் தெரிவிக்கிறார் .

CCTV காட்சியில் கல்லால் அடிப்பது ,கடுமையாக தாக்குவது போன்ற பதிவுகள் உள்ளது.

error: Content is protected !!