Skip to content
Home » நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்..

நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்..

டி.ராஜேந்தரின் உயிருள்ள வரை உஷா திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் கங்கா. அதன்பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல படங்களில் கங்கா நடித்துள்ளார். ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும்  திரைப்படங்களில் 2ம் கட்ட கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றார். சில சின்னத்திரை தொடர்களிலும் கங்கா  நடித்து வந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது சகோதரர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில்  கங்காவிற்கு நேற்று மாலை  திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகர் கங்காவுக்கு தற்போது வயது 63. அவரது சொந்தஊர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். இதனால் நாளை அவரது உடல் சிதம்பரம் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் நாளை அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!