தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்படும் பாரதிராஜா (84) அவர்களின் மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும், ரசிகர்களையும் ஆழந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை அவர் காலமானார். இவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் ’16 வயதினிலே’, ‘கொடிப் பறவை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், அவரது நெருங்கிய நண்பருமான நடிகர் ரஜினிகாந்த், நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த இயக்குநரின் உடலுக்கு மலவளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, கிராமத்து மண் வாசனை மாறாமல் திறந்தவெளிக்குக் கொண்டு வந்த ஒரு மகா கலைஞனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அஞ்சலி செலுத்திய பிறகு ரஜினி கூறியதாவது.. எண்ணற்ற கலைஞர்களை வாழ வைத்தவர் பாரதிராஜா. திரைத்துறையில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவர். என்னைப் பிடிக்கும், எனது நடிப்பு பிடிக்காது என்பார். மனதில் பட்டதை வௌிப்படையாக பேசுவார் என்று தெரிவித்தார்.
