Skip to content
Home » நடிகர் விஜய் செப். 17ல் புதிய கட்சி தொடக்கமா? பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை

நடிகர் விஜய் செப். 17ல் புதிய கட்சி தொடக்கமா? பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை

தமிழ்த்திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்த இடத்தில், சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்  விஜய். இவர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில்  கடந்த சில வருடங்களாக  இயக்கம் நடத்தி வருகிறார்.   கடந்த மாதம் 17ம் தமிழ் நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சென்னைக்கு அழைத்து பரிசு, சான்றிதழ் வழங்கினார்.  அந்த விழாவில் பேசிய விஜய் உங்கள் பெற்றோரை  ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லுங்கள் என்றார்.

அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசினார். அதற்கு முன்னதாக உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும்  மதிய உணவு வழங்கினார்.  காமராஜர் பிறந்த  ஜூலை 15ல்  இரவு நேர பள்ளி தொடங்கப்படும் என அறிவித்தார்.

இப்படியாக அவர் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவர் விரைவில்  அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.  இந்த நிலையில் நடிகர் விஜய் ,  ஐ பேக் நிறுவனத் தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான  பிரசாந்த் கிஷோரையும் சந்தித்து  கட்சி தொடங்குவது, தேர்தல் பணி குறித்து  ஆலோசித்ததாக  கூறப்படுகிறது. ஆனால்  அதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மறுத்துள்ளனர். அதே நேரத்தில்  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  சில வாரங்களுக்கு முன் நடிகர் விஜயை சந்தித்து பேசி உள்ளார்.  ஏற்கனவே  ஒரு முறை  ரங்கசாமி , நடிகர் விஜயை சந்தித்து பேசி இருந்தார். மீண்டும் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

தந்தை பெரியார் பிறந்த நாளான  செப்டம்பர் 17ம் தேதி புதிய கட்சி தொடங்குவது என்று விஜய் முடிவு செய்து உள்ளாராம். 2024 மக்களவை தேர்தலில் முன்னோட்டமாக போட்டியிடுவது என்றும், அதில் கிடைக்கும்  வாக்குகளை பொறுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கலாம் என   விஜய் முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!