Skip to content
Home » நன்றி கெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது.. நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் சாபம்…

நன்றி கெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது.. நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் சாபம்…

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல்வாதிகளும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் . வணக்கம், நான் திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி தேவர் பேசுகிறேன். திரையுலகில் நன்றி என்ற அர்த்தத்துக்கு மிகமிக பொருத்தமானவர் கேப்டன் விஜயகாந்த். மிகமிக விசுவாசமான மனிதர். சினிமாவை நேசித்தவர். சினிமா மூலம் நிறைய மனிதர்களுக்கு நல்லது செய்தவர். அவருக்கு பிறந்தநாள். விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஒரு நன்றிகெட்ட மனிதரை அடையாளம் காட்ட நான் இந்த வீடியோவில் பேசுகிறேன். நடிகர் விஜய் ஒரு 10, 15 நாட்களுக்கு முன்பு தொல் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அது சமூக வலைதளங்கள் உள்பட அனைத்து நியூஸ்களிலும் வந்தது. ஆனால் விஜய், இதுவரை விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவே இல்லை. இது மிகப்பெரிய துரோகம். விஜயகாந்த் இல்லை என்றால் நடிகர் விஜய் இல்லை. நடிகர் விஜயின் கையை பிடித்து செந்தூர் பாண்டி படத்தில் விஜயகாந்த் கூட்டி வந்து தனது தம்பி என அறிமுகம் செய்யாவிட்டால் ‛தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ என ரோட்டில் ஆடிக்கிட்டே தான் இருக்க வேண்டும். ஏனென்றால் விஜயகாந்த் இல்லாவிட்டால் அப்படிப்பட்ட கேரக்டர்கள் தான் விஜய்க்கு கிடைத்திருக்கும். ஆனால் இன்று ஒரு மனிதராக விஜயை மாற்றி கொண்டு வந்தவர் விஜயகாந்த். இதுதவிர விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு நிறைய படங்கள் பண்ணியதால் தான் அவரே இயக்குனராக வர முடிந்தது. இப்படி விஜய் குடும்பத்தையே வாழ வைத்ததவர் தான் விஜயகாந்த்.  அவரது பிறந்தநாளுக்கு விஜய் ஒரு வாழ்த்து கூட கூறவில்லை. விஜயகாந்த் பொதுவான மனிதர். அவரை வாழ வைத்த மனிதர். இத்தகைய சூழலில் நடிகர் விஜய் வாழ்த்து கூறாமல் இருப்பது என்பது அவர் தவறான பாதையில் செல்வதாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நன்றிகெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது. அவர்கள் தோற்றுப்போவார்கள். நான் சொல்கிற விஷயம் என்னவெ்ன்றால் நன்றி கெட்ட செயலால் நடிகர் விஜய் அரசியலில் ஜெயிக்கவே முடியாது. அவர் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அரசியலில் ஜெயிக்க முடியாது” என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!