Skip to content

த.வெ.க.,வில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

  • by Authour

கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி த.வெ.க., துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் இருந்தனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கட்சி துவங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில்,வெ.க., மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை.. தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கட்சிப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கட்சியானது அமைப்பு ரீதியாக, சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார். இதன்படி..

அரியலுார் – சிவக்குமார்

ராணிப்பேட்டை கிழக்கு – காந்திராஜ்

ராணிப்பேட்டை மேற்கு – மோகன்ராஜ்

ஈரோடு கிழக்கு – வெங்கடேஷ்

ஈரோடு மாநகர் – பாலாஜி

ஈரோடு மேற்கு – பிரதீப் குமார்

கடலுார் கிழக்கு – ராஜ்குமார்

கடலுார் தெற்கு – சீனுவாசன்

கடலுார் மேற்கு – விஜய்

கடலுார் வடக்கு – ஆனந்த்

கரூர் கிழக்கு – பாலசுப்பிரமணி

கரூர் மேற்கு – மதியழகன்

கள்ளக்குறிச்சி கிழக்கு – பரணி பாலாஜி

கோவை தெற்கு – விக்னேஷ்

கோவை மாநகர் – சம்பத்குமார்

சேலம் மத்தி – பார்த்திபன்

தஞ்சை தெற்கு – மதன்

தஞ்சை மத்தி – விஜய் சரவணன்

நாமக்கல் மேற்கு – சதீஷ் குமார்

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்டக் கழக இணைச் செயலாளர்கள், பொருளாளர்கள், 2 துணைச் செயலாளர்கள் , 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்றைய கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்தை தனது அறையில் இருந்து வெளியே அனுப்பிய விஜய், கட்சி பொறுப்பாளர்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். கட்சியின் கட்டமைப்பு, மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு, மாவட்ட அளவில் இருக்கும் பிரச்னை, புதிய நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகள் நியமிக்க பணம் வசூல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.

error: Content is protected !!