Skip to content

போதையில் அரைகுறை ஆடையுடன் ஆபாச பேச்சு… மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்…

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விநாயகன் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும் ட்ரெண்ட் ஆகி விட்டார். இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்புக்கு அவருக்கு தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் ஆனால், அடிக்கடி சர்ச்சைகளில் அவர் சிக்கி கொண்டு இருப்பதால் பட வாய்ப்புகளும் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.

ஏனென்றால், கடந்த ஆண்டு ஹைதராபாத் விமான ஊழியர்களிடம் அவர் சண்டையிட்டதாக கூறி அவரை காவல்துறை கைது செய்திருந்தனர். அதனை தொடர்ந்து இப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் செயல் ஒன்றை செய்துவிட்டு அதன்பிறகு அதற்கு தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள அவருடைய வீட்டில் மது போதையில் பால்கனியில் நின்று கொண்டு நிர்வாணமாக தகாத வார்த்தைகளால் பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது. வீடியோ வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களில் ஒரு பெரிய இடத்தில் இருந்து கொண்டு இப்படியா நடந்துகொள்வது என கண்டனங்கள் எழுந்தது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில் ” நடிகர் விநாயகன் நின்றுகொண்டிருந்த பிளாட்டின் எதிர் பக்கத்தைப் பார்த்து சில தகாத வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பதை காணலாம். அதன்பிறகு ஆடை அவிழுந்து கீழே அவர் அமருகிறார்.  பின்பும் எதோ பேசிக்கொண்டு இருந்தார்” . வீடியோ வைரலாகி கண்டனங்கள் கிளம்பிய நிலையில் தற்போது மன்னிப்பும்  கேட்டுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியதாவது ” ஒரு திரைப்பட நடிகனாகவும் ஒரு மனிதனாகவும் என்னால் உண்மையாகவே பல பிரச்னைகளை சமாளிக்கவே முடியாது. இந்த நேரத்தில் நான் என் தரப்பில் இருந்து எதிர்மறை செய்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..விவாதம் மீண்டும் தொடரட்டும்” எனவும் விநாயகன்  தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!