Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா வழக்கு தள்ளுபடி

நடிகை தமன்னா பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராகத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, பவர் சோப் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஒரு வருடத்திற்கு விளம்பரப்படுத்த நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் 2010-2011 காலகட்டத்தில் தமன்னாவின் புகைப்படங்களை அந்த நிறுவனம் விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் தனது படங்களைப் பயன்படுத்த நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தமன்னா தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை எனக் கூறி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடிகை தமன்னா மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவு சரிதான் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!