Skip to content
Home » திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் திமுக அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தது.
மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான குமார் தலைமை வகித்தார். கொள்கைப் பரப்புச் இணை  செயலாளரும், தலைமைக் கழக பேச்சாளருமான நடிகை விந்தியா  பேசியதாவது:  “”நிம்மதியில்லாமலேயே ஆட்சி நடத்தும் நிலையில், வீணாப் போன அமைச்சர்களை வச்சிக்கிட்டு ஸ்டாலின் அவஸ்தைப்படறார். திமுகவில் திருச்சிக்கே அடையாளமாய்த் திகழ்வது அமைச்சர் நேரு. ஆனால், அவருக்கு மாற்றாகவே உதயநிதி வீட்டில் வாட்ச்மேன் வேலை பார்க்கும் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியை வளர்க்கிறார். மோடிக்கு முன்பு கறுப்புக்கொடி காட்டிய ஸ்டாலின் இப்போது 2 ம் புலிகேசி போல நடக்கிறார். இந்தி தெரியாது போடா ன்னு அன்று குரல் கொடுத்த திமுகவினர், இப்போது அதற்கு எதிரா வாடா ன்றாங்க.

ஓபிஎஸ்., தினகரன், சசிகலா, மோடின்னு யாராக இருந்தாலும் கொள்கைக்கு விரோதமாக இருந்தால் எதையும் தில்லா ஒதுக்கித் தள்ளுவது அதிமுக மட்டுமே. தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறாமல் ஆத்தா வையும் காசு கொடுனு மட்டுந்தான் வாயைத் திறக்கிறாங்க. கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு பெற்ற கடன் ரூ. 3 லட்சம் கோடி. இவை ஓக்கிப் புயல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களின் பாதிப்பினால்தான் நம் மக்களுக்கு உதவிட மட்டுமே. ஆனால், வெறும் இரண்டரை  ஆண்டு ஆட்சிக் காலத்தில் 4 லட்சம் கோடி கடன் பெற்றிருக்கிறது  திமுக அரசு.

சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர்வரி என அனைத்தையுமே ஏற்றிவிட்டது. அன்னதான திட்டம், மழைநீர் திட்டம், என எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தது தப்பா? என்பதை எண்ணிப் பாருங்க. திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை நம்பி வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்.

 

 

 

 

ஒவ்வொருவரையும் கொத்தடிமையாக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. அதனை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது., எடப்பாடி பழனிச்சாமியும் சும்மா இருக்க மாட்டார் ஒவ்வொரு தவறுக்கும் நிச்சயமாக தண்டனை உண்டு.
விளம்பரத்திற்காக நடத்தியது திமுக மாநாடு. 10 லட்சம் பேருக்கு உணவளித்ததாக சொல்கிறார்கள்.

நம்பி வாக்களித்த மக்களுக்கு, சோறு போட முடியாத திமுக அரசு. 10 லட்சம் பேருக்கு உணவளித்ததாக மார்தட்டிக்கொள்கிறது. ஆனால் அத்தனை சேர்களும் காலியாக இருந்தது.
திமுக மக்களை பற்றி கவலை பட மாட்டார்கள், அவர்கள் கவலையெல்லாம் கஜானா மீது தான் இருக்கும்.
பொம்மை அரசாங்கத்தை நடத்துகிறார் ஸ்டாலின்.
கேளம்பாக்கம் பிரச்சனை, வெள்ள நிவாரணம் அனைவருக்கும் போய் சேராதது, சென்னை மாநகராட்சியில் பிரச்சனை, ராமர் கோவில் திறப்பு அன்று பிரச்சனை என அனைத்திற்கும் சேகர் பாபு பேட்டி தருகிறார்.முதலமைச்சர் ஸ்டாலினா? சேகர்பாபு வா? – என சந்தேகம் வருகிறது.

அத்தனை துறைக்கும் ஒருவர் பதில் சொல்கிறார் என்றால் அவர் முதலமைச்சராக தானே இருக்க முடியும். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாகட்டும், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆகட்டும் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிப்பார்கள்.ஏனென்றால், நாங்கள் நடத்தியது மம்மி ஆட்சி – இப்ப நடப்பது டம்மி ஆட்சி.

கவர்ச்சி திமுக மாநாட்டில் தீர்மானம் போட்டார்கள்.. தீர்மானம் ஒன்று மகன் அப்பாவுக்கு வாழ்த்து சொல்வது, தீர்மானம் 2 அப்பா மகனுக்கு வாழ்த்து சொல்வது, பேரன் தாத்தாவுக்கு வாழ்த்து சொல்வது, அண்ணன் தங்கைக்கு வாழ்த்து சொல்வது என
இப்படி குடும்பத்திற்குள் வாழ்த்து சொல்லி நடந்தது திமுக மாநாடு.
உடன்பிறப்புக்கு என்ன கிடைத்தது.

நீட், ஜல்லிக்கட்டு தடையை கொண்டு வந்தது. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தான்.
ஜெயலலிதா, எடப்பாடியார் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் தூங்காமல் பணியாற்றினார்கள்.. திமுக ஆட்சியில் திமுக அமைச்சர்களால் ஸ்டாலின் தூங்காமல் தவிக்கிறார்..

ஸ்டாலின் நடத்துவது இதுவா திராவிட மாடல் அரசு அல்ல  ? இது தரித்திர மாடல் அரசு.

திமுக ஆட்சியில் ஏதாவது புதிய திட்டம் உண்டா? அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் திமுக ஆட்சி காலத்தில் நிறுத்திவிட்டனர்.பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிய திமுகவை நீங்கள் , உங்கள் வாக்குகளால் அவர்களை ஏமாற்றும் தருணம் வந்துவிட்டது .எனவே சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.

 

இவ்வாறு அவர் பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் எஸ்கேடி கார்த்திக் ,ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!