Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணிப்பூருக்கு மேலும் கூடுதலாக துணை ராணுவம்… பிரதமர் நடத்திய ஆலோசனையில் முடிவு

மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120- க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்கள் வீடு மட்டுமின்றி . மத்திய ,மாநில அமைச்சர்களின் வீடுகளும்  தீக்கிரையாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சிகள் அனைத்துக் கட்சி குழுவை மணிப்பூருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர்.  இந்தநிலையில், அமெரிக்க – எகிப்து பயணத்தை முடித்து விட்டு டில்லி திரும்பிய பிரதமர் மோடி மணிப்பூர் நிலவரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் முதல்வருடனும் ஆலோசித்தார்.

இந்த நிலையில் மணிப்பூருக்குமேலும் கூடுதலாக மத்திய துணை ராணுவத்தை அனுப்புவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!