Skip to content
Home » சூரியனை நோக்கி பாய்ந்தது ஆதித்யா எல்-1…. 125 நாள் பயணம் வெற்றி பெறுமா…?…

சூரியனை நோக்கி பாய்ந்தது ஆதித்யா எல்-1…. 125 நாள் பயணம் வெற்றி பெறுமா…?…

  • by Senthil

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது. இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து

Aditya L1 Mission what will it study for Sun what do we know already - सूर्य के किन हिस्सों का अध्ययन करेगा आदित्य L1, अभी क्या पता है उनके बारे में –ஆய்வுசெய்ய இருக்கிறது.இவை  125 நாட்களில் ஆதித்யா எல்-1  சூரியனுக்கு செல்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது.

இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா எல்  1 விண்கலம். சூரியனில் ஏற்படும் மாற்றங்களால் நிகழும் சூரிய புயல்களை முன்பே அறிய ஆதித்யா எல் 1 உதவும்.  108 கி.மீ. வேகத்தில் ராக்கெட் பயணித்தது. 2வது கட்ட செயல்பாடு இயல்பாக நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.  இதனை தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவியர்கள் நேரடியாக விண்ணில் பாய்வதை கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!