Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக கூட்டணி முறிவு…. கருத்து சொல்ல அதிகாரம் இல்லை…. வானதி நழுவல்

சென்னையில்  நேற்று   அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக- பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என நழுவிக்கொண்டார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறும்போது, இது குறித்து ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தேசிய தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் எந்த கருத்தையும் வெளியிடுவதாக இல்லை. இது குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம். அதிமுக வினர் கூறிய கருத்துக்களும் அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!