Skip to content
Home » அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

மயிலாடுதுறை அருகே உள்ள எடுத்துக்கட்டிப் பகுதியிலிருந்து வயல்வெளியில் மண் எடுத்துச் சென்று பூதனூர் வெள்ளாழத் தெருவில் உள்ள பொதுகுளத்தை தூர்த்துவந்துள்ளனர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அவர் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக கழக செயலாளர் பவுன்ராஜ் என்பதால் அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.
எடுத்துக்கட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் அரசு அதிகாரகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை, 100 டிராக்டர் மண்ணுக்குமேல் குளத்தில் கொட்டப்பட்டுவந்ததால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் மூலம்

தரங்கம்பாடி தாலுக்கா தட்டான்குளத்தில் மண்கொண்டு தூர்க்கப்படுவதை கிராம நிர்வாக அலுவலர்மூலம் தடுத்தும் கேட்காமல் மீண்டும் தூர்க்கப்படுவதை தடுக்கவேண்டும், அந்த குளத்தின் ஆக்கிரமிப்புக்களை அகற்றி மீண்டும் அந்த குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும், அரசியல்வாதியாக இருக்கும் நபர் இந்த தட்டான்குளத்தை தூரத்துவருகிறார் இந்த குளத்தை தூர்ப்பதற்கு 100க்கும்மேற்பட்ட டிப்பர் லரிமண் கொட்டப்பட்டு இருக்கிறது, இந்த குளத்தை தூரக்க எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமானது இந்த குளத்தை தூர்க்க மண எடுக்கப்ப பயன்படுத்திய டிப்பர் லாரிகள், பொக்லின் எந்திரங்கள் மீது சட்ட விரோதமாக மணல் எடுத்ததற்கான கிரிமினல் வழக்குப் பதிவுசெய்யப்படவேண்டும், கொட்டப்பட்ட மணலை அந்த குளத்திலிருந்து எடுத்து வெளியேற்றவேண்டும் சம்பந்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார், இதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து தூர்க்கப்படும் அந்த குளம் குறித்து கேட்டறிந்தார், தரங்கம்பாடி வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!