Skip to content
Home » 9 தொகுதியில் மட்டும் பாஜக போட்டி….அதிமுக கூட்டணியை புதுப்பிக்கவும் திட்டம்

9 தொகுதியில் மட்டும் பாஜக போட்டி….அதிமுக கூட்டணியை புதுப்பிக்கவும் திட்டம்

  • by Senthil

தமிழகத்தில்  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்து விட்டது.  பாஜகவுடன் சேர்ந்ததால் தான் நமக்கு முஸ்லிம் ஓட்டு கிடைக்கவில்லை என்று அதிமுக நம்புகிறது. தமிழ்நாட்டில் நமக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டது , இனி என்ன செய்ய முடியும் என்ற நிலையில் தவித்து வந்தாலும் பாஜக அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.அதே நேரத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வருகிறது.

நாங்க பாஜகவில் இருந்து வெளியே வந்து விட்டோம். எங்களை ஆதரியுங்கள், எங்களுடன் கூட்டணி வையுங்கள் என அதிமுக  சிறுபான்மை அமைப்புகளை கூவி கூவி அழைத்தாலும் யாரும் நம்பவும் தயாராக இல்லை. வரவும் தயாராகவில்லை.   ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி நம்மை மீறி எதுவும் செய்ய மாட்டார் என்று பாஜக தலைமை  இன்னமும் கருதுகிறது.  ஜனவரி மாதத்தில்  எடப்பாடி பழனிசாமியை மோடியோ,  அமித்ஷாவோ அழைத்து நேரடியாக  கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி  ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள் என  பாஜகவினர் இன்னமும் நம்புகிறார்கள். அப்படி அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால், அதிமுக அதன் பலனை  அனுபவிக்கும் நிலையை ஏற்படுத்தி விடலாம் என்றும் பாஜக திட்டம் வகுத்துள்ளதாம்.

தென்சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், சிதம்பரம், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 9தொகுதிகளில் பாஜகவும், தென்காசி(கிருஷ்ணசாமி), வேலூர்(ஏ.சி.சண்முகம்), பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி(பாரிவேந்தர்), தேனி(ஓ.பன்னீர்செல்வம்), சிவகங்கை(டிடிவி தினகரன்) ஆகிய தொகுதிகளில் மட்டுமே தீவிரமாக செயல்பட்டால் போதும். மற்ற 24 தொகுதிகளில் பாஜக கூட்டணி போட்டியிடாது. இந்த தொகுதிகளில் அதிமுக போட்டியிடும். ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால், நாம் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். மற்ற 14 தொகுதிகளில் அவர்கள் வேட்பாளரை நிறுத்தாமல் இருந்தால் போதும் என்று பின்னர் பேசுவோம்  என்று பாஜக மேலிடத்தலைவர் ஒருவர்  தமிழக நிர்வாகிகளிடம் கூறி வருகிறாராம்.

தற்போது 5 மாநில தேர்தலில் மேலிடம் கவனம் செலுத்து வருகிறது. அந்த தேர்தல் முடிந்த பிறகு தமிழக பிரச்னைகளை கவனிக்கலாம். தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் பல தொகுதிகளில் டெபாசிட் காலியாகும். அந்த தொகுதிகளில் நமக்கு தேசிய அளவில் கெட்ட பெயர் வரும். அதனால் தேவையில்லாத விஷப்பரீட்சைக்கு தயாராக வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக குறித்து எந்த விமர்சனமும்  செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால்தான் கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர்களை அண்ணாமலை சந்திக்காமல் உள்ளார். ஆனாலும் பாஜகவின் கோரிக்கையை அதிமுக ஏற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!