Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில்  4.9.2023 – திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் 20.8.2023 அன்று நடைபெற்ற  அதிமுக  மாநாட்டுக் குழுவினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!