Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக முன்னாள் அமைச்சர் வீராசாமி காலமானார்

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி,88, பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு, கடந்த 1971ம் ஆண்டு வெள்ளூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தொடர்ந்து, 1972ம் தி.மு.கவில், இருந்து, எம்.ஜிஆர் அ.தி.மு.க.,வை துவங்கியது போது, எம்.ஜி.ஆர்.,மீதான ஈர்ப்பால், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, அ.தி.மு.க., ஒன்றிய அமைப்பாளராக பதவி வகித்தார்.
பிறகு, 1980ம் ஆண்டு,ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,சார்பில், போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகினார். மீண்டும், 1984ம் ஆண்டு, அ.தி.மு.க.,சார்பில், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார். இதையடுத்து வீராசாமியை உணவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக எம்.ஜி.ஆர்., அறிவித்தார். அதன் பிறகு, அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்த வீராசாமி நேற்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு அ.தி.மு.க.,வினர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!