தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி இந்தியன் வங்கியில் வந்த பென்ஷன் தொகையை ஏமாற்றிய ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் ராஜா (41 ) . இவரது பெரியப்பா ஜோதிவேல் 1978 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று திருச்சி ரயில்வேயில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தவர் 6. 7. 2019 அன்று இறந்துள்ளார். அவர் இறந்ததால் அவருக்கு வரும் பென்ஷன் தொகையை அவரது பெரியம்மா மங்கையர்கரசிக்கு கிடைப்பதற்காக ஏஜெண்டாக இருந்த முத்துக்குமரனிடம் தெரியப்படுத்தி பெற்றுத்தர தெரிவித்துள்ளனர். அவர் வாங்கித் தருவதாக தெரிவித்து, இன்று வரை கொடுக்கவில்லையாம். ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு பென்ஷன் தொகை திருக்காட்டுப்பள்ளி இந்தியன் வங்கிக்கு அவரது கணக்கிற்கு வந்த பணத்தை முத்துக்குமரன் மற்றும் அவரது மனைவி காவியா மூலம் வந்த பென்ஷன் தொகை ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரத்தை மங்கையர்கரசிக்கு தெரியாமலேயே எடுத்துச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் ராஜா நேற்று புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் முத்துக்குமரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருக்காட்டுப்பள்ளிஇந்தியன் வங்கியில் வந்த பென்ஷன் தொகையை கையாடல் செய்த நிகழ்ச்சி அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளது .
