டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்து. இவர் திருமணம், ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவர் தற்போது வெள்ளித்திரைக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
அந்த படத்திற்கு அகோரி என பெயரிட்டுள்ளனர். படத்தை மோஷன் பிலிம் பிக்சர்ஸ் மூலமாக சுரேஷ் என். மோகன் தயாரிக்க அறிமுக இயக்குநரான டி.எஸ். ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஹரித்துவார் போல பிரம்மாண்ட் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது. படம் இம்மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது. படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வௌ்ளி திரையில் எண்ட்ரி ஆகும் சித்துவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சித்துவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.