கரூர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (45). இவர் கரூரில் உள்ள பேருந்து கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சொந்தமான நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. நிலப்பிரச்சனை தொடர்பாக கரூர் நகர போலீசில் சில நாட்களுக்கு முன்பு மனு ஒன்றை அளித்துள்ளார். மனுவின் மீது போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்து இன்று காலை சுமார் 8.00 மணியளவில் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள 80 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
செல்போன் டவர் மீது ஏறும்போது தியாகராஜனுக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தியாகராஜனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
