Skip to content
Home » காவிரி டெல்டாவில் ரூ.120 கோடியில் தூர்வாரும் பணி……வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

காவிரி டெல்டாவில் ரூ.120 கோடியில் தூர்வாரும் பணி……வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Senthil

வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில்(2024-25)  இடம் பெற்றுள்ள முக்கிய  அம்சங்கள் வருமாறு:

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர்,   புதுகை உள்ளிட்ட7  மாவட்டங்களில் “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை 2235 கி.மீ. தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு. இது தவிர  காவிரி டெல்டாவில்  ஆறு, கால்வாய்களில்  தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கப்படுகிறது.  தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் இதில் 919 பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு

* ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீட்டில் வாழை பரப்பு விரிவாக்கம், முட்டுக் கொடுத்தல் மேற்கொள்ள மானியம்

* மூலிகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

* பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு..

* மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்

* ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

* சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு

ரூ-141 கோடியில், வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கணினி மயமாக்கப்படும்.

* பாரம்பரிய காய்கறி  ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

* செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

 

* 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு.

 

* ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்

உதகை ரோஜா பூங்காவில் 100 வகை புதிய ரோஜாக்கள் நடவு செய்யப்படும். ரோஜா பூங்கா மேம்படுத்தப்படும்.

தோட்டக்கலை இயந்திர கண்காட்சி நடத்த ரூ.10 கோடி . 3 இடங்களில் வேளாண் கண்காட்சி நடத்த ரூ.9 கோடி ஒதுக்கப்படும்.

கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் அமைக்க ரூ.2.48 கோடி ஒதுக்கீடு

* வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்

* சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த ரூ.12.51 கோடி ஒதுக்கீடு

* செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை நிறுத்தம் ஏற்படுவதை தவிர்க்க ரூ.6.31 கோடி ஒதுக்கீடு

* 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.36.15 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகள் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும்.

* 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்

* கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த “தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும்.

* பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்.

வேளாண் பரப்பை அதிகரிக்க ரூ.108 கோடி ஒதுக்கப்படும்.

பண்ருட்டியில் ரூ.16.13 கோடியில் பலா மதிப்பு கூட்டுதலுக்கான மையம் அமைக்கப்படும்.  100 ஒழுங்குமுறை கூடங்கள் கட்டமைப்பு சீரமைக்கப்படும்.  இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்படுகிறது.

கொல்லிமலை மிளகு,   மீனம்பூர் சீரக சம்பா,  புவனகிரி  மிதி பாகற்காய், சத்தியமங்கலம் செவ்வாழைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி, பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி  மேம்பாட்டு முகமை அமைக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!