திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் அதிமுக மாணவரணி நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். மதுரைக்கு வருகை தந்துள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர்கள் திமுகவில் இணைந்தனர். இச்சம்பவம் அப்பகுதி அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
