அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குறித்து அவதூறாக பேசி வருவதாக கூறி, அமைச்சர் நிர்மல்குமாருக்கு அதிமுக சார்பில் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவின் சொத்துக்களை கைப்பற்ற இபிஎஸ் திட்டம் தீட்டுவதாக அமைச்சர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குறிப்பிட்டு, இதற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதோடு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் இன்பதுரை இந்த நோட்டீஸை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அமைச்சர் நிர்மல்குமாருக்கு அதிமுக நோட்டீஸ்
