சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வீட்டு வாசலில் தாயுடன் பேசிக்கொண்டிருந்த அஜித் (28) என்ற இளைஞரை, இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினர். தடுக்க முயன்ற அஜித்தின் தாய் சரசுவுக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. கஞ்சா விற்பனை தகராறில் ஏற்பட்ட முன்விரோதமே இக்கொலைக்குக் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் தாயின் கண்முன்னே வாலிபர் வெட்டிப் படுகொலை
