அடிக்கடி செல்போன் பேசுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம்
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கலா ( வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து சென்று விட்டார்.
தாயார் துபாயில் வேலை பார்த்து வருகிறார் இதனால் கலா அங்குள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார் சமீபகாலமாக அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார் இதை பார்த்த அவரது சித்தியும் பாட்டியும் அவரை கண்டித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது சித்தி உறையூர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
மதுவுக்கு அடிமையான வாலிபர் திடீர் சாவு
திருச்சி சங்கிலியாண்ட புரம் தெரசம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 25 )பெயிண்டர் திருமணமாகாத இந்த வாலிபருக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார் பின்னர் மது போதையில் முதலியார் சத்திரம் அங்கன்வாடி பகுதியில் மயங்கி கிடந்தார் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து அவரது தாயார் மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் சிக்கினார்
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் கஞ்சா கடத்திச் செல்வதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திவ்யப்பிரியா மற்றும் போலீசார் ராமஜி நகர் விரைந்தனர் பின்னர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகாமையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ராம்ஜி நகர் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 42) என்பவரை பிடித்து அவர் வைத்திருந்த சாக்குப் பையை சோதனை செய்தபோது அதில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து சதீஷை கைது செய்தனர்
போதை மாத்திரைகளுடன் சிக்கிய 2 ரவுடிகள்.. மோட்டார் சைக்கிள் பறிமுதல்
திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் உய்யக் கொண்டான் திருமலை மாநகராட்சி பூங்கா பகுதியில் வாகன சோதனை நடத்தினர் அப்போது பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி பிரதீப் என்கிற பிரதீப் ராஜ் வயது 23 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி ஆகாஷ் என்கிற பெஞ்சமின் ஆகாஷ் 23 ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர் பின்னர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தை பரிசோதனைக்கு உட்படுத்திய போது
பெட்ரோல் டேங்க் கவரில் 200 போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து போலீசார் இரண்டு ரவுடிகளையும் கைது செய்து ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகளை கைப்பற்றி மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
