Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம்  இன்று நடந்தது.  இதில் அம்மாநில முதல்வர்  சித்தராமையா, துணை முதல்வர்  டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜேடி(எஸ்) தலைவர் எச்டி குமாரசாமி, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மக்களவை எம்பி சுமலதா அம்பரீஷ் மற்றும் பல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.   அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசும்போது,  காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்டப்போராட்டம் தொடரும். காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காங்கிரஸ் அரசு பாதுகாக்கும். அனைத்துக்கட்சி தலைவர்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!