Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் கைது…….கோவையில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கோவை சிவானந்தா காலனியில்  மாலை 5 மணிக்கு இந்த கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். மேலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொ கதீன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹி ருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து பேசுகிறார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கண்டன பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!