Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமேஸ்வரத்தில் பெண் குழந்தை கொலை புகார் – 3 பேரிடம் விசாரணை!

ராமேஸ்வரத்தில் பெண் குழந்தை கொலை புகார் – 3 பேரிடம் விசாரணை!

ராமேஸ்வரத்தில் 2-வதாக பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொலை செய்ததாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, குழந்தையின் தந்தை உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சம்பை பகுதியை சேர்ந்த லோகநந்தினிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தையை புதைத்த விவகாரம் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவர் நாகபாண்டி (30), மாமனார் மற்றும் நாத்தனார் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link