கரூரில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் பேருந்துகளுக்கு மட்டும் எரிவாயு நிரப்பப்படுவதாக 4 சக்கர கார் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு 50-க்கும் மேற்பட்ட கார்களின் ஓட்டுநர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கரூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையம் அமைந்துள்ளது.
பேருந்துகளுக்கு மட்டும் காலை சி.என்.ஜி எரிவாயு நிரப்பப்படுவதாகவும் கார்கள் இதர வாகனங்களுக்கு நிரப்பப்படாத நிலையில் 50-க்கும் மேற்பட்ட கார்கள் வரிசை கட்டி நின்று வருகிறது
இது குறித்து கார் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்
மேலும் போலீசார் ஆத்தூர் பகுதியில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் இடத்திற்கு நேரில் விசாரணை மேற்கொண்டனர் போலீசார் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சிஎன்ஜி எரிவாய்வு தற்பொழுது கார்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு நிரப்பும் பணியானது நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
