Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

தஞ்சாவூர் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் தான்தோன்றியம்மன் கோயிலில் நேற்று தொடங்கியது.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம் எதிரே தான்தோன்றியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் வளாகத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நேற்று மதியம் அறுசுவை உணவுடன் கூடிய அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

சீனிவாச சிவாச்சாரியார் தலைமையில், சங்க மாவட்ட இணைச் செயலாளர் கண்ணப்பன்  மாவட்டச் செயலாளர் பி.நவநீதகிருஷ்ணன் முன்னிலையில்,அன்னதானத்தை புரவலர் கலா தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை திருச்சி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், அன்னதான முகாம் அலுவலர்கள் கணேசன், பொன்னையன், ராஜூ குருக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள், பொதுமக்களுக்கு வரும் ஜவவரி.13 ம் தேதி வரை தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சபரிமலை செல்லும் வழியில் அமுதா நதிக்கரை மற்றும் பம்பையிலும், தஞ்சாவூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வரும் ஜன.13-ம் தேதி மகர ஜோதி தரிசனம் வரை தினமும் அன்னதானம் வழங்க அதற்கான மளிகை மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் நேற்று லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!