Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருடிய வீட்டிலேயே மது அருந்தி, உணவு சாப்பிட்டு சென்ற மர்ம நபர்

திருடிய வீட்டிலேயே மது அருந்தி, உணவு சாப்பிட்ட மர்ம நபர்

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, பாரதிதாசன் நகர் 1-வது கிராஸ் பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற அவர், இரவு சுமார் 7 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், வீட்டில் மது அருந்தியதுடன், சமையலறையில் இருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமி, தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே, வீட்டுக்குள் புகுந்த திருடன் அங்கேயே அமர்ந்து மது அருந்தி, உணவு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!