Skip to content
Home » ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன்-கலைவாணி தம்பதியினரின் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தனசேகரன் கலைவாணி தம்பதியினருக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் அறுபதாம் கல்யாணம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  மனைவி சௌமியா அன்புமணி, சௌமியாவின் தந்தையும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கிருஷ்ணசாமி உள்ளிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!