Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திரா துணைமுதல்வர் பவன் கல்யாண் அவரது மனைவியை விவாகரத்து

ஆந்திரா துணைமுதல்வர் பவன் கல்யாண் அவரது மனைவியை விவாகரத்து செய்தார். ஆந்திர துணை முதலமைச்சரும் பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா கொனிடேலா ஆகிய இருவரும் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு பரஸ்பரம் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த முடிவை இருவரும் இணைந்து எடுத்ததாகவும், தொடர்ந்து நல்ல நண்பர்களாகவும் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோராகவும் இருப்போம் என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மாடலான ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை பவன் கல்யாண் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

2011-ல் வெளியான ‘டீன் மார்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது.

error: Content is protected !!