Skip to content

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்,
போசன் டிராக்கர் செயலியில் முக அங்கீகாரம் (Face Recognition) பதிவேற்றம் செய்வதை அங்கன்வாடி ஊழியர்களை கட்டாயப்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தீர்ப்பின்படி ரூ 10 லட்சம், ரூ 5 லட்சம் பணிக்கொடையாக வழங்கவேண்டும்,
பணியில் இருந்த இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 1993 பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கவேண்டும், தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளைப்போல மே மாகும் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும், பணியை எளிமையாக்க புதிய செல்போன் மற்றும் 5 ஜி செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!