Skip to content
Home » அண்ணா அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு…

அண்ணா அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட விளாங்குடியில் உள்ள அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இளம் வாக்காளர்களான மாணவ மாணவிகளிடம் தேர்தலில் வாக்களிப்பதன்

அவசியம் குறித்தும் எதிர்கால வாக்காளர்களான மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணாவின் அறிவுறுத்தலின்படி விளாங்குடி அண்ணா அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிப்பதை விளக்கும் வகையில் 100% VOTE வடிவில் மாணவ, மாணவியர்களை நிறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!