அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஞானசேகரன் என்கிற பிரியாணிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் எப்ஐஆர் வெளியானதாகவும் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே போல்அண்ணாநகரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 3 வழக்குகளையும் விசாரிக்க பெண் எஸ்பிக்கள் ஜமன் ஜமால், பிருந்தா, ஸ்நேக பிரியா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது விசாரணை நடத்தி வரும் 3 இளம் எஸ்பிக்களும் சமீபத்தில் தான் ஏஎஸ்பியாக பயிற்சி முடித்து முதன் முறையாக எஸ்பியாக பதவி ஏற்றவர்கள். இவர்களிடம் இந்த வழக்குகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஒய்வு இல்லாமல் வேலை வாங்குவதாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தனிப்படையில் இருந்த டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ள டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி அசோக்நகரில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது..
அண்ணா பல்கலை மாணவி வழக்கு.. டிஎஸ்பி ராஜினாமா?
