பாஜக தலைவர் அண்ணாமலை உடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்தனர். இதற்காக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க ஈ.பி.எஸ் அணியினர் கோரினர். இன்று மாலை அண்ணாமலையை ஓபிஎஸ் தரப்பு சந்திக்க உள்ள நிலையில் முன்கூட்டியே பாஜக தலைவர்களை ஈபிஎஸ் அணியினர் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு….
