பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கனிஷ்க் வர்மா இயக்கி வரும் அறிவியல் புனைகதை மற்றும் ஏலியன் ஆக்ஷன் திரைப்படமான ‘சாமுக்’ (Samuk) 2027-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், அக்ஷய் குமார் இதன் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
அக்ஷய் குமாரின் ‘சாமுக்’ வெளியீடு அறிவிப்பு
