அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ மேல, தாளங்கள் முழங்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக நடந்து சென்று வேட்புமன தாக்கல் செய்தார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான திமுகவை சேர்ந்த மொஞ்சனூர் இளங்கோ அதே தொகுதியில் போட்டியிட திமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொஞ்சனூர் இளங்கோ தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியில் மேல, தாளங்கள் முழங்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற பேரணி தொடங்கி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
