Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சாந்தப்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ குட்டக்கார கருப்பசாமி மதுரவீரன் சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷே விழாவை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேகமாக யாக குண்டங்கள் அமைத்து காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்தது பின்னர் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கோபுர கலசத்திற்கு சந்தன பொட்டிட்டு வண்ண மாலைகள் அணிவித்து கற்பூர ஆர்த்தி காட்டப்பட்டது பின்னர் கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்ற பின்னர் பொதுமக்கள் மீது புனித திருத்தம் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷே விழாவை காண அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!