Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றச் சம்பவங்கள் முதலமைச்சர் விஜய்யின் கண்களுக்குத் தெரியவில்லையா?- ஸ்டாலின் கடும் தாக்கு

குற்றச் சம்பவங்கள் முதலமைச்சர் விஜய்யின் கண்களுக்குத் தெரியவில்லையா?

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாக தவெக அரசை விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.

தவெக அரசை விமர்சித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அக். 31-ல் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

சினிமாவில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறு, தற்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துள்ளது.

தவெக ஆட்சியமைப்பதற்கு முன்பாக, மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் குற்றங்கள் என்பதை மட்டும்தான் தவெகவின் அனைத்து கூட்டங்களிலும் விஜய் பேசினார். அதனை வைத்துதான் ஆட்சிக்கும் வந்தார்.

ஆனால், இப்போது பட்டப்பகலில் முக்கிய சாலைகளில் கொடூரக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்களை கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்தல் போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கிறது.

சிறுமிகள் தொடர்ந்து காணாமல்போய் வருகின்றனர். இந்த (தவெக) அரசு மீது குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட பயமில்லை. தங்களுக்கான ஆட்சியாக இந்த ஆட்சியை குற்றவாளிகள் கொண்டாடுகின்றனர். தலைநகர் சென்னையிலேயே அடையாறு, மயிலாப்பூர், தரமணி என மிக முக்கிய இடங்களிலேயே கொலைகள் நடக்கின்றன. ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றவாளிகள், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் வழியிலேயே அரிவாளால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுகின்றனர். நீதிமன்ற வளாக எதிரிலேயே வெட்டி கொலை செய்யப்படுகின்றனர்.

பல மாவட்டங்களில் இரட்டைக் கொலை நடக்கின்றனர். கொலை செய்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுகின்றனர். புழல் சிறையிலேயே கைதிகள் தப்பியோடுகின்றனர். தேனி மாவட்ட சிறையில் ஒரே இரவில் முதன்மை வாயிலைத் திறந்து 17 கைதிகள் சாவகாசமாக தப்பியுள்ளனர்.

சாலையின் நடுவே கொலை செய்துவிட்டு, எந்தப் பதற்றமுமின்றி பைக், ஆட்டோக்களில் ஏறி குற்றவாளிகள் செல்கின்றனர்.

இந்தக் காட்சிகளையெல்லாம் முதல்வர் பார்க்கிறாரா இல்லையா என்பதுகூட நமக்குத் தெரியவில்லை. இந்தச் செய்திகள் அவரின் காதுகளுக்குச் செல்கிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், தமிழ்நாட்டில் இது எதுவுமே நடக்காதது போலத்தான் முதல்வரின் செயல்பாடுகள் உள்ளன.

எல்லா கட்சிகளும் அறிக்கை, கண்டனங்கள், போராட்டங்களையும் மேற்கொள்கின்றனர். ஆனால், முதல்வரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சினிமா படப்பிடிப்புகளில் கேரவன்களில் மணிக்கணக்கில் இருப்பதுபோல, யாராலும் அணுக முடியாத அளவுக்கு முதல்வர் இருக்கிறார்.

காவல்துறைக்கு முதல்வர்தானே பொறுப்பு. அவர் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? அதிகாரிகளுடன் உரிய ஆய்வுக் கூட்டம் நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அல்லவா? ஆனால், இது எதுவுமே நடப்பதில்லை. எல்லா துறைகளுக்கும் ஒருசில அமைச்சர்கள்தான் பதில் சொல்கின்றனர். அவையும் பொறுப்பற்ற பதில்களாகத்தான் இருக்கின்றன.

error: Content is protected !!