சென்னை நீலாங்கரையில் வசித்து வந்த முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகரன், வயது மூப்பு காரணமாக காலமானார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த சகோதரர் ராஜசேகரனின் மனைவியான அமல் ராஜசேகரனின் மறைவு, குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், பெரியம்மாவின் உடலுக்கு மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துயரத்தில் இருந்த உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் நேரில் சென்று மறைந்த அமல் ராஜசேகரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
