Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் புகைப்படம் அருகில் முன்னாள் முதலமைச்சர் படத்தை வைத்ததால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மேயர் மற்றும் ஆணையர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்று வந்தது.

மண்டல குழு தலைவர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், கூட்டரங்கின் சுவரில் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த திமுகவின் 3-வது வார்டு கவுன்சிலர் சக்திவேல் திடீரென எழுந்து சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர் விஜய் புகைப்படத்தின் அருகே, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டினார்.

பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் எடப்பாடி பழனிச்சாமி படத்தை வைக்க வேண்டும் என்று புகைப்படத்தை எடுத்து வந்தனர் அதேபோன்று காங்கிரஸ் கவுன்சிலர் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என புகைப்படத்தை எடுத்து வந்தனர். இதனால் திமுக, அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கவுன்சிலர்களை மாநகராட்சி ஆணைய சமாதானப்படுத்தி இருக்கையில் அமரச் செய்தார் இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!